மெக்சிகோவில் கொல்லப்பட்ட அமெரிக்க மூதாட்டிகள்

மெக்சிகோவில் கொல்லப்பட்ட அமெரிக்க மூதாட்டிகள்

1 mins read
125467a4-3105-42dd-b092-df7b2b643ee1
மூதாட்டிகளின் மரணத்துக்குக் காரணமானவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் கூறினர். - படம்: இணையம்
Google News Preferred Icon

மெக்சிகோ சிட்டி: அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த இரு மூதாட்டிகள் வட மெக்சிகோவில் உள்ள நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டிகளின் மரணத்துக்குக் காரணமானவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் கூறினர்.

சாலையில் கவிழ்ந்துகிடந்த வெள்ளை நிற காரில் 72 வயது எனிடினாவும் 82 வயது உபால்டினாவும் மாண்டுகிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு மூதாட்டிகளும் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ குடியுரிமை பெற்றவர்கள் என்று நம்பப்படுகிறது.

மூதாட்டிகள் கொல்லப்பட்ட இடத்தில் வன்முறைச் சம்பவங்கள், குடியேறிகள் கடத்தல் அதிகம் நடப்பதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்