ஈரானில் ஜப்பானியர் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: வெளியுறவு அமைச்சர்

ஈரானில் ஜப்பானியர் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: வெளியுறவு அமைச்சர்

1 mins read
ஈரானில் வாழும் ஏறத்தாழ 200 ஜப்பானியர்களில் நான்கில் மூன்று பங்கினர் அந்நாட்டு நிரந்தரவாசிகள்: ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்
a0d9f833-5276-42ef-9bfb-af1680d2e0ea
வியாழக்கிழமை (மார்ச் 5) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல் நடைபெற்ற இடங்களிலிருந்து வெளியான புகை. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் தொஷிமிட்ஸு மொதெகி வெள்ளிக்கிழமை (மார்ச் 6) தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்டார். தடுத்துவைக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, டெஹ்ரானில் செயல்படும் என்எச்கே ஊடகத்தின் தலைவர் என்று திரு மொதெகி விளக்கினார்.

அவர்கள் இருவரிடமும் தொடர்புகொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இரண்டாம் நபரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

“ஜப்பானிய அரசாங்கம் தடுத்துவைக்கப்பட்டுள்ளோரின் உடனடி விடுதலைக்கு அழைப்பு விடுக்கிறது. அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் முடிந்த ஆதரவை அது நல்கும்,” என திரு மொதெகி கூறினார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தத் தொடங்கியபோது, ஈரானில் ஏறத்தாழ 200 ஜப்பானியர்கள் அங்கு இருந்தனர். அவர்களில் நான்கில் மூன்று பங்கினர் அந்நாட்டு நிரந்தரவாசிகள் ஆவர். அவர்களில் பலர் ஈரானைவிட்டு வெளியேற மறுக்கின்றனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஓமானிலும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் இருந்து ஜப்பானியக் குடிமக்கள் நாடுதிரும்ப உதவும் விமானம், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நள்ளிரவில் ஓமானைவிட்டுப் புறப்படும் எனவும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்