காஸாவில் மருத்துவ ஊழியர்கள் இருவர் பலி

காஸாவில் மருத்துவ ஊழியர்கள் இருவர் பலி

படம்: ராய்ட்டர்ஸ்

28 Nov 2026 - 6:48 pm

1 mins read

ஜெனிவா: காஸாவில் உள்ள மருத்துவச் சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு வெளியே எம்எஸ்எஃப் மருத்துவ அறப்பணி அமைப்பு ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்களது ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு ‘மெடசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ்’ எனப்படும் அவ்வமைப்பு கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

“எங்கள் வளாகங்களில் எம்எஸ்எஃப் சின்னங்கள் தெளிவாகப் பொறிக்கப்பட்டு இருந்தன. அவை அமைந்துள்ள இடமும் இஸ்ரேலிய ராணுவத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது,” என்று அந்த அமைப்பு நவம்பர் 28ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு உரிய பொறுப்புடைமை வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய ராணுவம், உயிரிழந்த அந்த இரண்டு எம்எஸ்எஃப் ஊழியர்களும் மனிதாபிமானப் பணியாளர்களைப்போல் வேடமிட்ட பயங்கரவாதிகள் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலுடன் சேர்த்து, காஸாவில் கொல்லப்பட்ட எம்எஸ்எஃப் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளதாக அந்த மருத்துவக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காஸா போர் தொடங்கியதிலிருந்து, காஸாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் முதன்மை நாசர் மருத்துவமனையில் தாக்குதல் நடைபெற்றது. மருத்துவமனைகளுக்கு உள்ளே ஹமாஸ் போராளிகள் செயல்படுவதாகவும், அவற்றிற்கு அடியில் ஹமாஸ் சுரங்கப் பாதைக் கட்டமைப்பின் பகுதிகள் அமைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்