மலேசியா: உயிர்மாய்ப்புத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த இரு புதிய திட்டங்கள்

மலேசியா: உயிர்மாய்ப்புத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த இரு புதிய திட்டங்கள்

படம்: த ஸ்டார்

28 Sep 2026 - 7:08 pm

2 mins read

ஈப்போ: உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுப்பதில் நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்த, மலேசிய சுகாதார அமைச்சு இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அஹமது தெரிவித்துள்ளார்.

மலேசிய தேசிய உயிர்மாய்ப்பு, உயிரிழப்புப் பதிவகம், உயிர்மாய்ப்புக்குப் பிந்தைய சேவை வழிகாட்டிகள் ஆகியவை, திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 28) மாரா பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான உலக உயிர்மாய்ப்புத் தடுப்பு தினம் 2026ஐ முன்னிட்டுத் தொடங்கப்பட்டன.

உயிர்மாய்ப்பு மரணங்கள், உயிரிழப்புகள் குறித்த தடயவியல் தரவுகளைச் சேகரிப்பதை மலேசிய தேசிய உயிர்மாய்ப்பு, உயிரிழப்புப் பதிவகம் மேம்படுத்தும் என்றும் இது முறையான பகுப்பாய்வு, போக்குக் கண்காணிப்பைச் சாத்தியமாக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

“பதிவேட்டின் துல்லியமான தரவு அடித்தளத்தில் உள்ள தேவைகளை இலக்காகக் கொண்ட கொள்கைகள், திட்டங்கள், சேவைகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படலாம்,” என்று ஸுல்கிஃப்லி தனது உரையின்போது கூறினார்.

உயிர்மாய்ப்பு மரணத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டெடுப்பதற்கும் ஒரே உயிர்மாய்ப்பு அபாயம் போன்றவற்றைக் குறைப்பதற்கும் தகுந்த உளவியல் ஆதரவைப் பெறுவதை உயிர்மாய்ப்புக்குப் பிந்தைய சேவை வழிகாட்டிகள் உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

“வழிகாட்டுதல்களின்கீழ், உயிர்மாய்ப்புக்குப் பிந்தைய சேவைகள் கட்டமைக்கப்பட்ட, முறையான, ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார், மனநலம், உளவியல் ஆதரவு சேவைகள் குழுக்கள் அடித்தள உதவியை வழங்கும்.

கல்வி அமைச்சு, சமூக நலத்துறை, அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி, திறனை வளர்க்கும் நிகழ்ச்சிகளையும் சுகாதார அமைச்சு நடத்தும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் 2022ல் 981 ஆகவும் 2023ல் 1,087 ஆகவும் 2024ல் 1,114 ஆகவும் அதிகரித்ததை காவல்துறை தரவுகள் காட்டுவதாகச் சுட்டிக்காட்டினார்.

“2025ல் இச்சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 1,079 ஆக இருந்தது,” என்று கூறிய ஸுல்கிஃப்லி, “இருப்பினும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைஉளவியல்தரவு