அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் தவறான காரில் ஏறிய காரணத்திற்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
ஆஸ்டின் நகரில் உள்ள ஒரு கார் நிறுத்தும் இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது.
காயமடைந்த மாணவிகளில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு 18 வயது என்று தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கியால் சுட்ட 25 வயது ஓட்டுநர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மாணவிகள் தவறான காரில் ஏறியதற்கு மன்னிப்பும் கேட்டனர். ஆனாலும், ஆடவர் அதைக் கேட்காமல் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான மாணவிகள் இருவரும் உற்சாகமூட்டும் நடனக்குழுவில் உள்ளவர்கள்.
மாணவிகள் உடல்நலம் தேறவேண்டி அவரின் நடனக்குழுவினர் பிரார்த்தனையும் செய்துள்ளனர். மாணவிகளின் மருத்துவச் செலவிற்குப் பணம் திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

