தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘யாகி’ புயல்: வியட்னாமில் மரண எண்ணிக்கை 59ஆக அதிகரிப்பு

1 mins read
a1209aaf-91f9-4542-b97a-dfda42bbe503
‘யாகி’ புயல் காரணமாக வியட்னாமில் பல வீடுகள் சேதமடைந்தன. - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: ‘யாகி’ புயல் காரணமாக வியட்னாமில் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன.

செப்டம்பர் 9ஆம் தேதி நண்பகல் நிலவரப்படி வியட்னாமின் வடக்குப் பகுதியில் மாண்டோர் எண்ணிக்கை 59ஆக அதிகரித்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 44 பேர் நிலச்சரிவுகளிலும் திடீர் வெள்ளத்திலும் உயிரிழந்தனர்.

மேலும் பல இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘யாகி’ புயல் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வியட்னாமின் வடகிழக்குக் கரையைக் கடந்தது.

புயல் காரணமாக வியட்னாமில் உள்ள பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நெடுஞ்சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியதோடு, தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்