தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

102 பிள்ளைகளை பெற்ற பின்பு போதும் என்கிறார் தந்தை

1 mins read
fa6d5aac-35e6-40e6-a679-e415989858be
தனது மனைவிகள், பிள்ளைகள் சிலருடன் கசேரா (படம்: ராய்ட்டர்ஸ்) -

உகண்டாவைச் சேர்ந்த கசேரா என்பவருக்கு தன்னுடைய அத்தனை பிள்ளைகளின் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை. ஒன்று, இரண்டு பெற்றிருந்தால் ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். இவர் பெற்றதோ 102 பிள்ளைகள்.

கசேராவுக்கு மொத்தம் 12 மனைவிகள், 102 பிள்ளைகள், 578 பேரப்பிள்ளைகள். இது போதும் என்கிறார் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் கசேரா.

முதலில் நன்றாகத்தான் இருந்தது. இப்போது அதுவே பிரச்சினையாகிவிட்டது என்கிறார் 68 வயதான கசேரா.

தன்னுடைய மனைவிகள் குடும்பக் கட்டுப்பாடு மருந்துகள் எடுத்துக்கொள்வதாகக் கூறிய கசேரா தன்னுடைய பொறுப்பற்ற செயலால் இப்போது தவிப்பதாக ஒப்புக்கொண்டார்.

கசேராவின் பிள்ளைகள் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவரது கடைசி மனைவியின் வயது 35.