ரி‌ஷி சுனக் மனைவி ஒரே நாளில் $81 மில்லியன் இழந்தார்

1 mins read
0d4e06d3-54f9-46b4-92a0-bc3db14b53c4
படம்: ராய்ட்டர்ஸ் -

பிரிட்டன் பிரதமர் ரி‌ஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி ஒரே நாளில் கிட்டத்தட்ட 81 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளார்.

திங்கட்கிழமை (ஏப்ரல் 17) அன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்டன.

அக்‌ஷதா அந்நிறுவனத்தில் 0.94 விழுக்காட்டு பங்குகளை வைத்துள்ளார். அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு 450 மில்லியனுக்கு மேல் என்று கூறப்படுகிறது.

அக்‌ஷதாவின் தந்தை நாராயணமூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவர்.

திங்கட்கிழமை முடிவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 9.4 விழுக்காடு குறைந்தது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இவ்வளவு பெரிய சரிவைக் கண்டுள்ளது.