தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டைநிறுத்த பேச்சுவார்த்தையைத் தொடரும் உக்ரேன், அமெரிக்கா

1 mins read
9e2e67a0-51ca-4922-9dc9-0af7f2db58af
ர‌ஷ்ய- உக்ரேன் போரை நிறுத்த அமெரிக்காவின் உதவியுடன் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. - ராய்ட்டர்ஸ்

உக்ரேனின் எரிசக்தி வசதிகளையும் முக்கியமான உள்கட்டமைப்பையும் பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் பற்றி உக்ரேனிய, அமெரிக்க அரசதந்திரிகள் கலந்துரையாடினர்

மூவாண்டுகளாகத் தொடரும் உக்ரேன்-ர‌ஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அரசதந்திர முறையில் முயன்று வருகிறார்.

அதன் ஓர் அம்சமாக உக்ரேன், அமெரிக்கப் பேராளர்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அமைதியை விரும்புவதாக அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்தார்.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அரசதந்திரிகள் ஆக்ககரமான வகையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் பேராளர்களின் பணி தொடர்கிறது என்றும் திரு ஸெலென்ஸ்கி சொன்னார்.

இருப்பினும் போரை நிறுத்தும் உத்தரவைத் திரு புட்டின் பிறப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

ர‌ஷ்யாவும் உக்ரேனும் ஒன்று மற்றதன் எரிசக்தி உள்கட்டமைப்புகள்மீது தாக்குதல் நடத்துவதை 30 நாள்களுக்கு நிறுத்த வேண்டும் என்று திரு டிரம்ப் முன்வைத்த பரிந்துரைக்குத் திரு புட்டின் கடந்த வாரம் ஒப்புக்கொண்தார்.

ஆனால் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் வேளையில் அந்தச் சண்டைநிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குறியானது.

குறிப்புச் சொற்கள்