தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ர‌ஷ்ய ஆக்கிரமிப்புகளிலிருந்து 23 பிள்ளைகளை மீட்ட உக்ரேன்

1 mins read
4522e3c4-8f5d-46cc-8cf9-c7e8e8c39c7d
போர் நடக்கும் பகுதிகளிலிருந்து 19,500க்கும் அதிகமான பிள்ளைகளை ர‌ஷ்யா அதன் நாட்டுக்கு கடத்தி சென்றதாக உக்ரேனிய அதிபர் அலுவலகச் செயலாளர் ஆண்டிரே எர்மார்க் குற்றஞ்சாட்டினார். - படம்: ராய்ட்டர்ஸ்

கிய்வ்: ர‌ஷ்யப் படைகள் உக்ரேனிய எல்லையில் சில இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. தற்போது அப்பகுதிகளிலிருந்து 23 பிள்ளைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியை உக்ரேனிய அதிபர் அலுவலகம் டெலிகிராம் வழியாக அக்டோபர் 9ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.

“போர் நடக்கும் பகுதியில் உள்ள பிள்ளைகளை ர‌ஷ்யா கடத்திச் சென்றது அல்லது போர் பகுதிகளில் தடுத்துவைத்தது. பிள்ளைகளை மீட்க உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“மீட்கப்பட்ட பிள்ளைகளில் இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் கல்வியைக் கற்க வற்புறுத்தப்பட்டனர். செய்ய மறுத்தால் அவர்களது தாயிடமிருந்து பிரிக்கப்படுவர் என்று அச்சுறுத்தப்பட்டனர்,” என்று அதிபர் அலுவலகம் கூறியது.

போர் நடக்கும் பகுதிகளிலிருந்து 19,500க்கும் அதிகமான பிள்ளைகளை ர‌ஷ்யா கடத்திச் சென்றது அல்லது போர்ப் பகுதிகளில் தடுத்துவைத்தது என்று உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.

யேல் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பள்ளி கடந்த மாதம் வெளியிட்ட தரவுகளின்படி கிட்டத்தட்ட 35,000 உக்ரேன் பிள்ளைகளை ர‌ஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

பிள்ளைகளை நாடுகடத்தவில்லை என்று ர‌ஷ்யா மறுத்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்