போர் காரணமாக உக்ரேனில் இருந்து பெல்ஜியத்திற்கு அகதியாக சென்ற நபர் இப்போது லாட்டரி சீட்டு மூலம் 723,000 வெள்ளி வென்றுள்ளார்.
வெற்றியாளரின் பெயரை லாட்டரி சீட்டு நிறுவனம் வெளியிடவில்லை.
மே 16ஆம் தேதி ஆடவர் கிட்டத்தட்ட 7.50 வெள்ளிக்கு லாட்டரி சீட்டு வாங்கியதாக அதிகாரிகள் கூறினர்.
ஆடவர் அவருக்குரிய பரிசை தலைமை அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளும்படி நிறுவனம் அறிவித்துள்ளது.
வெற்றி பெற்ற நபரின் மனம் உக்ரேனில் தான் உள்ளதாகவும் இப்போது கிடைத்த வெற்றி அவருக்கு மகிழ்ச்சி தந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஆடவரின் வயது 18லிருந்து 24க்குள் இருக்கும் என்றும் பரிசுத்தொகையின் ஒருபகுதியை போர் நடைபெறும் தமது நாட்டுக்கு நன்கொடையாக வழங்க அவர் முடிவுசெய்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதே நேரம் கடினமான நேரத்தில் தம்மை அரவணைத்து பெல்ஜியத்தில் பார்த்துக்கொண்டவர்களுக்கு விருந்து கொடுக்கவுள்ளதாகவும் பரிசுபெற்றவர் கூறினார்.
உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு போர்த்தொடுத்தது. அதனால் உக்ரேனில் இருந்து 8 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறினர்.
தொடர்புடைய செய்திகள்
பெல்ஜியத்தில் மட்டும் 72,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.