ஒட்டாவா: ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனுக்கு 800 ஆளில்லா வானூர்திகளை கனடா இலவசமாக வழங்க இருக்கிறது.
ரஷ்யா நடத்தும் தாக்குதல்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள உக்ரேனுக்கு இந்த ஆளில்லா வானூர்திகள் பேரளவில் உதவும் என்று கனடா தற்காப்பு அமைச்சர் பில் பிளேர் பிப்ரவரி 19ஆம் தேதியன்று தெரிவித்தார்.
உக்ரேனுக்கு இலவசமாக வழங்கப்படும் ஆளில்லா வானூர்திகளின் மொத்த மதிப்பு 95 மில்லியன் கனடா டாலருக்கும் (S$70.44 மில்லியன்) அதிகம் என்று கனேடியத் தற்காப்பு அமைச்சு கூறியது.

