பேங்காக்: கம்போடியாவில் மோசமடைந்துவரும் பொருளியல் சூழலுக்கு மத்தியில், பிரதமர் ஹுன் மானெட்டின் அரசாங்கத்திற்கு உள்நாட்டில் கூடுதல் நெருக்குதல் அளிக்கப்பட்டு வருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
கம்போடியாவில் இணையக் குற்றம், இணைய மோசடிகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்தச் சட்டவிரோத அமைப்புகளிடமிருந்து பெறப்படும் லாபம், அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புடையதாக அனைத்துலக உளவுத்துறையும் தகவல்களும் கூறுகின்றன.
எல்லைத் தாண்டிய குற்றம், இணையக் குற்றம், இணைய மோசடிச் செயல்பாடுகள் பற்றி போதைப்பொருள், குற்றம் குறித்த ஐக்கிய நாட்டு அலுவலகம் அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய மோசடி நிலையங்களின் வரைபடத்தையும் உள்ளடக்கும் அதன் ஆய்வு, அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளின் அளவு, அவை இடம்பெறும் இடங்கள் குறித்த உண்மை நிலவரத்தைக் காட்டியது.
ஐநா அலுவலகம் தொகுத்த அந்த வரைபடம், தாய்லாந்து-கம்போடியா எல்லையில் பல மோசடி நடுவங்களைத் தெளிவாக அடையாளப்படுத்துகிறது.
வட்டாரத்தில் மோசடி நடுவமாக மியன்மார் திகழ்வதாக பரவலாகக் கருதப்பட்டுவரும் வேளையில், இணைய மோசடிச் செயல்பாடுகளின் மையப் பகுதியாக கம்போடியா உருவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

