தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலியக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் ஐநா

1 mins read
cf0b64cc-85f7-4ce5-85b4-e0ea2e659dc8
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் (ஐநா) மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புப் பிரிவுத் தலைவர் டாம் பிளட்சர் (வலது) நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்று இஸ்‌ரேல் அதிருப்தி தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் (ஐநா) மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அது தெரிவித்தது.

அந்த ஆதாரங்களைத் தம்மிடம் காட்டும்படி அப்பிரிவின் தலைவர் டாம் ஃபிளட்சர் கூறியுள்ளார்.

ஃபிளட்சரும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புப் பிரிவும் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்று ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் ஐநாவுக்கான இஸ்‌ரேலியத் தூதர் டேனி டனோன் தெரிவித்தார்.

எனவே, அப்பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர்களுக்கான விசா ஒரு மாதத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் திரு டனோன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்ஹமாஸ்ஐநா