பேங்காக்: மியன்மாரில் தொழிலாளர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கொண்டு வந்த தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அந்நாட்டை ஆட்சி செய்யும் ராணுவ ஆட்சியாளர்கள் சனிக்கிழமை (ஜூன் 7) சாடியது.
அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு வியாழக்கிழமை (ஜூன் 5) எடுத்த நடவடிக்கையால் மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படக்கூடும்.
மியன்மாருடன் கொண்டுள்ள உறவு அந்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள், சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் விழிப்புடன் இருந்து உறுதி செய்ய வேண்டும் என்று ஐநாவின் தொழில் பிரிவு கூறியது.
மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களின்கீழ் தொழிலாளர்களின் உரிமை மீறப்பட்டால் அதுகுறித்து உடனடியாகப் புகார் செய்ய வேண்டும் என்று அனைத்துலக அமைப்புகளிடம் அப்பிரிவு வலியுறுத்தியது.
மியன்மார் ராணுவத்துக்காகப் பணிபுரிய அந்நாட்டு வன்முறை பயன்படுத்தப்படுவதை மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும் என்றும் வர்த்தகத் தொழிற்சங்கவாதிகளுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு மியன்மாரிடம் ஐநா தெரிவித்திருந்தது.
ஐநாவின் பரிந்துரைகளை மியன்மார் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஆனால் தங்கள் முயற்சிகளை அது கண்டுகொள்ளவில்லை என்றும் மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.