துபாய்: வளங்கள், அதிகார பலம் ஆகியவற்றைத் தேடி ஆப்பிரிக்க நாடுகளில் ஐக்கிய அரபு சிற்றரசுகள் பேரளவில் முதலீடு செய்து வருகிறது.
ஆப்பிரிக்காவில் உள்ள வர்த்தகத் தடங்களில் உள்ள துறைமுகங்கள், முக்கிய கனிமவளங்கள் உள்ள சுரங்கங்கள், பேரளவிலான புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திட்டங்கள் போன்றவற்றில் ஐக்கிய அரபு சிற்றரசுகள் முதலீடு செய்து வருகிறது.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் முதலீடு ஆப்பிரிக்காவில் குறைந்து வரும் நிலையில், தனது செல்வம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு சிற்றரசுகள் அவ்விடத்தை நிரப்புகிறது.
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் 2019ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளில் 110 பில்லியன் அமெரிக்க டாலர் (S$143 பில்லியன்) பெறுமானமுள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளைப் போல, புதைபடிவ எரிபொருளில் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாற ஐக்கிய அரபு சிற்றரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் விளைவாக பல்வேறு துறைகளில் அது முதலீடு செய்கிறது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பல நாடுகளில் தூய எரிசக்தி ஆலைகளை அது கட்டுகிறது அல்லது இயக்கி வருகிறது.

