வாஷிங்டன்: ஆஃப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளில் சிக்கிக்கொண்ட அகதிகளுக்கு உதவப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறுவதற்குச் சில நாள்களுக்கு முன்பே ஐக்கிய அரபு சிற்றரசு அரசாங்கம் ஆப்கானியர்களைத் திருப்பி அனுப்ப தொடங்கிவிட்டதாகவும் அமெரிக்காவிடம் அதுகுறித்து தெரிவித்ததாகவும் எமிரேட்ஸ் உள்துறை அமைச்சு சொன்னது.
அமெரிக்க ஆதரவு பெற்ற ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தைத் தலிபான் அமைப்பு கவிழ்த்ததைத் தொடர்ந்து காபூலிலிருந்து தப்பிய பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களைத் தற்காலிகமாகப் பராமரிக்க அமெரிக்காவின் நெருங்கிய பாதுகாப்புப் பங்காளியான ஐக்கிய அரபு சிற்றரசுகள் அரசாங்கம் 2021ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டது.
எமிரேட்ஸ் மனிதநேய நகர் என்று அழைக்கப்படும் அபுதாபியில் அன்றுமுதல் ஏறக்குறைய 17,000 ஆஃப்கானியர்கள் தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் கிட்டத்தட்ட 30 ஆப்கானியர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக இருந்தது.
ஆஃப்கானிய அகதிகள் சிலரைத் தலிபானிடம் ஒப்படைப்பதற்கான ஆயத்த வேலைகளை ஐக்கிய அரபு சிற்றரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக ‘ஜஸ்ட் த நியூஸ்’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
“அவர்களைக் காப்பாற்ற இப்போதே முயற்சி செய்வேன்,” என்று திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் ஒரு சிலரைக் காப்பாற்ற சாத்தியமில்லாமல் போகலாம்.
ஜூலை 10ஆம் தேதி அபுதாபியில் அமெரிக்க அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் வெளியுறவு அமைச்சுக்கான சிறப்பு ஆலோசகர் சேலம் அல்-ஸாபி, ஜூலை தொடக்கத்தில் இரண்டு குடும்பங்கள் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் ஆஃப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக அமெரிக்கர்களிடம் கூறினார்.
அமெரிக்காவின் தற்போதைய கொள்கையைப் புரிந்துகொண்டிருந்தாலும் எஞ்சியுள்ள 25 பேரை ஆஃப்கானிஸ்தானிடம் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 20ஆம் தேதிக்குள் ஒப்படைப்பதற்கான பணிகளைச் செய்யப் போவதாக திரு அல்-ஸாபி தெரிவித்தார். அகதிகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைத் தலிபான் அமைப்பிடம் பெற எமிரேட்ஸ் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதையும் அவர் சுட்டினார்.
அந்த தனிநபர்கள் உடனடியாக ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனரா என்பது பற்றியும் ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்ற இரண்டு குடும்பங்களின் நிலை குறித்தும் உடனடி தகவல்கள் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
காத்திருந்து சளித்துவிட்டதால் நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இரண்டு குடும்பங்களும் ஜூலை தொடக்கத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் திரு அல்-ஸாபி குறிப்பிட்டார்.