தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா: இன்டெல் நிறுவனத்துக்கான $11.5 பில்லியன் மானியம் குறைப்பு

1 mins read
e87e88c8-f45b-48ce-8b48-7a6a2a6f625f
இன்டெல் நிறுவனம் சந்திக்கும் சிக்கல்களால் உள்நாட்டில் கணினிச் சில்லு உற்பத்தி செய்வது தொடர்பான அமெரிக்காவின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், இன்டெல் நிறுவனத்துக்கான மானியத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறது.

கணினிச் சில்லுச் சட்டத்தின்கீழ் அமெரிக்க அரசாங்கம் அந்நிறுவனத்துக்கு 8.5 பில்லியன் அமெரிக்க டாலரை (S$11.5 பில்லியன்) கணினிச் சில்லு மானியமாக வழங்குகிறது.

இனி அது 8 பில்லியன் அமெரிக்க டாலருக்குக்கீழான தொகைக்குக் குறைக்கப்படும் என்று தகவலறிந்தோர் கூறுகின்றனர்.

இது தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையொப்பமாகவில்லை என்பதால் அவர்கள் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.

மானியக் குறைப்பின்போது, அமெரிக்க ராணுவத்திற்கு கணினிச் சில்லு தயாரிப்பதன் தொடர்பில் இன்டெல் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தமும் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஒஹையோவில் உள்ள கணினிச் சில்லுத் தொழிற்சாலைகளில் இன்டெல் திட்டமிட்டிருந்த முதலீடுகள் தாமதமாகும் என்று அந்நிறுவனம் கூறியது. அதையடுத்து அரசாங்கம் மானியக் குறைப்பு குறித்து முடிவெடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அதிபர் பைடனின் நிர்வாகம், இன்டெல் அதன் முதலீடு தொடர்பான கடப்பாட்டை 56 ஆண்டுகால வரலாற்றில் ஆகப் பெரிய காலாண்டு இழப்பைச் சந்தித்ததால், செலவுக் குறைப்பு தொடர்பான நெருக்குதலை எதிர்கொள்கிறது இன்டெல். இதையடுத்து ஏறத்தாழ 15,000 பேரை வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையை அது மேற்கொண்டுவருகிறது.

குறிப்புச் சொற்கள்