அமெரிக்காவில் சிறுவன் ஒருவனுக்கு பறவைக் காய்ச்சல்

1 mins read
0eb7648a-5eee-4fff-a97e-7ee74d8be41c
பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் சிறுவர் ஒருவர் பாதிப்படைந்திருப்பது இதுவே முதல்முறை என்று நவம்பர் 22ஆம் தேதியன்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சிறுவர் ஒருவருக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் சிறுவர் ஒருவர் பாதிப்படைந்திருப்பது இதுவே முதல்முறை என்று நவம்பர் 22ஆம் தேதியன்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவர் செல்லும் குழந்தை பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் மற்றவர்களுக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடத்தவும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுப்பதற்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பறவைக் காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டுள்ள சிறுவர் சான் ஃபிரான்சிஸ்கோவின் அலாமேடா பகுதியைச் சேர்ந்தவர்.

அவருக்கு இலேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டில் குணமடைந்து வருவதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையமும் கலிஃபோர்னியா பொதுச் சுகாதாரத்துறையும் தெரிவித்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சிறுவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்