அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதில் ஒருவர் மாண்டார். அதையடுத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அந்தச் சம்பவம் ஒரு குறிவைக்கப்பட்ட அரசியல் வன்முறை என்று ஆளுநர் டிம் வால்ஸ் சாடினார்.
மினியபலிஸ் நகருக்கு அருகில் இருக்கும் புரூக்லின் பார்க் வட்டாரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 55 வயது மெலிஸா ஹோர்ட்மென்னும் அவரது கணவரும் கொல்லப்பட்டனர்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோன் ஹொஃப்மன் என்ற 60 வயது உறுப்பினர், அவர் மனைவி ஆகியோர்மீது பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்தத் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் அவர்களின் இல்லத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலிருந்து நடத்தப்பட்டது.
அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்ததாக நம்பப்படும் சந்தேக நபரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர். ஆடவர், 57 வயது வான்ஸ் லுதர் பொல்டர் என்று குறிப்பிட்ட அதிகாரிகள், சந்தேக நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு 50,000 டாலர் வெகுமானம் தரப்படும் என்று அறிவித்தனர்.
போல்டர் என்ற சந்தேக ஆடவர், திரு ஹோஃப்மன்னுடன் மாநிலத்தின் ஊழியரணி மேம்பாட்டு வாரியத்தில் சேவையாற்றியவர். ஆனால் அதிகாரிகள் சந்தேக நபர் அரசியல்வாதிகளை அறிந்திருந்தாரா என்பதை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
போல்டர் போலியான அடையாளத்தைக் காண்பித்து காவல்துறையின் சீருடையில் தாக்கப்பட்டோரின் வீடுகளுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. ஆடவர் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் காரைப் போன்ற காரிலும் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
செனட்டர் ஹோஃப்பன், அவரது மனைவி தொடர்பிலான சம்பவம் குறித்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு வந்தது.
அதையடுத்து பிற்பகல் 3.35 மணியளவில் வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் நாடாளுமன்ற நாயகர் ஹோட்மனைப் பார்க்கச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்ட்மன் வீட்டில் சந்தேக நபர்மீது அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து ஆடவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.