தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரிவிதிப்பால் அமெரிக்காவில் விலை இருமடங்கு உயரும்: பெருஞ்செல்வந்தர் நிக் மோபிரே

1 mins read
d3db18c4-8fac-4c03-bfb4-959ff6f97702
ஸுரு குழுமத்திடமிருந்து விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதை அமெரிக்க வர்த்தகர்கள் பலர் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு நிக் மோபிரே கூறினார். - படம்: இபிஏ

வெலிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகள் காரணமாக தமது நிறுவனம் முடங்கிவிட்டதாக விளையாட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரும் பெருஞ்செல்வந்தருமான நிக் மோபிரே குறை கூறியுள்ளார்.

எனவே, வேறு வழியின்றி அமெரிக்காவில் விற்கப்படும் தமது நிறுவனம் உற்பத்தி செய்யும் விளையாட்டுப் பொருள்களின் விலையை உயர்த்தப்போவதாக அவர் கூறினார்.

திரு மோபிரேயின் ஸுரு குழுமம் பல்வேறு விளையாட்டுப் பொருள்களை உற்பத்தி செய்கிறது.

இதற்கான ஆலைகள் சீனாவில் உள்ளன.

இப்பொருள்கள் அமெரிக்காவின் வால்மார்ட், டார்கெட் பேரங்காடிகளில் விற்கப்படுகின்றன.

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 145 விழுக்காடு வரியை அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.

இதனால் திரு மோபிரேயின் நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸுரு குழுமத்திடமிருந்து விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதை அமெரிக்க வர்த்தகர்கள் பலர் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகத் திரு மோபிரே கூறினார்.

“விலையை நாங்கள் அன்றாடம் மறுஆய்வு செய்து வருகிறோம். அதை பேரளவில் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்றார் திரு மோபிரே.

குறிப்புச் சொற்கள்