200 முறை பாம்பைக் கடிக்கவிட்டு நச்சுக்கு எதிரான அபூர்வ மருந்தை உருவாக்க முயற்சி

1 mins read
7f17c82a-072f-40c2-88c8-9ccd7844c2ab
அமெரிக்க ஆடவர் 700 முறை பாம்பு நச்சை தமது உடலில் செலுத்திச் சோதித்துள்ளார். - கோப்புப் படம்: ஊடகம்

வாஷிங்டன்: பாம்பின் நச்சை ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகத் தமது உடலில் செலுத்திய அமெரிக்கரின் ரத்தம் பாம்புக்கடிக்கு எதிரான அபூர்வ மருந்தாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

டீம் ஃபிரைடின் என்னும் அந்த ஆடவரின் ரத்தத்தில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை புரதம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

விலங்குகளிடம் அவரது ரத்தத்தைச் செலுத்தி சோதித்துப் பார்த்த பின்னர் அவர்கள் அந்த முடிவுக்கு வந்தனர். அந்த ஆடவரின் ரத்தம் பாம்புக்கடி நச்சுக்கு எதிரான ஓர் எதிர்ப்பு மருந்தை உருவாக்க வழிவகுத்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பல்வேறு வகையான ஆபத்தான பாம்பு நச்சுகளுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை அது வழங்குவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாம்புக்கடிக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில், கொடிய நச்சுள்ள எந்த வகைப் பாம்பு கடித்ததோ அதற்கு ஏற்ற வகையில்தான் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

ஃபிரைட் கடந்த 18 ஆண்டுகளாக, எந்த வகையான நச்சுப் பாம்பு கடித்தாலும் வேலை செய்யக்கூடிய வகையில் அனைத்துக்கும் பொதுவான எதிர்ப்பு மருந்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

ஃபிரைட்டை 200க்கும் மேற்பட்ட முறை பாம்பு கடித்தபோதும் உயிருடன் உள்ளார். மேலும் பாம்பின் நச்சை 700க்கும் மேற்பட்ட முறை தமது உடலில் செலுத்தி உள்ளார். எந்த வகையான நச்சுப் பாம்பு கடித்தாலும் எல்லாவற்றுக்கும் பொதுவான எதிர்ப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியாக அவர் அதனைச் செய்துள்ளதாக பிபிசி கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்