48,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் யுபிஎஸ்

1 mins read
deb08508-e922-4da2-8bfe-3b547fd54ba9
யுபிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விநியோகச் சேவை ஓட்டுநர்களின் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்புடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு கிட்டத்தட்ட 34,000 குறைவாக உள்ளது. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: யுபிஎஸ் நிறுவனம் ஏறத்தாழ 48,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கிறது.

அமேசான் நிறுவனத்தின் பொட்டலங்களுக்கான விநியோகச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யுபிஎஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 28) கூறினர்.

யுபிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விநியோகச் சேவை ஓட்டுநர்களின் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்புடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு கிட்டத்தட்ட 34,000 ஆக குறைவாக உள்ளது.

மூன்றில் ஓர் ஊழியர் செப்டம்பரில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

சிலர் தாங்களாகவே முன்வந்து பதவி விலகும் திட்டத்தின்கீழ் வேவையைவிட்டுச் சென்றதாக யுபிஎஸ் நிறுவனம் கூறியது.

2024ஆம் ஆண்டிறுதியில் யுபிஎஸ் நிறுவனத்துக்கு உலகளாவிய நிலையில் 490,000 ஊழியர்கள் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்