நினைத்ததைவிட 10 மடங்கு அதிக ஆபாசப் படங்களை வைத்திருந்தவர் மீண்டும் கைது

1 mins read
காலணிக் கயிறுகளில் கேமராக்களைச் சேர்ந்துக் கட்டுதல்
7058fd1b-397b-40b8-a6ac-81c25a6e0dce
நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், கென்னத் புரிந்த குற்றங்களின் தீவிரத்தை அதிகாரிகள் உணர்ந்தனர். - படம்: இணையம்

செல்ம்ஸ்போர்டு: ஆபாசக் காணொளிகளை வைத்திருந்ததற்காக 2023ஆம் ஆண்டில் 66 வயது கென்னத் பிஸ்கோஃப் என்பவருக்கு மறுவாழ்வுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை, நன்னடத்தைக் கண்காணிப்பு ஆகிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதற்கிடையே, கென்னத் 37 ஆபாசக் காணொளிகளை வைத்திருந்ததாகத் தொடக்கத்தில் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து 400க்கும் மேற்பட்ட காணொளிகள் பின்னர் அவரிடம் கண்டுபிடிக்கப்பட்டன.

தனது காலணிக் கயிறுகளில் கேமராக்களைச் சேர்த்துக் கட்டிய கென்னத், அவற்றின் வழியாகப் பெண்களின் பாவாடைக்குள் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆபாசக் காணொளிகளை கென்னத் வைத்திருப்பதை அறிந்துகொண்ட விசாரணை அதிகாரிகள், கடந்த ஆண்டு கென்னத்தை மறுபடியும் கைது செய்தனர்.

வெவ்வேறு ஹோட்டல்களின் சன்னல்கள் வழியாகவும் பெண்களைக் காணொளி எடுத்த கென்னத், தனது காணொளிகளைத் திரட்டி அவற்றை ஒன்றாகத் தொகுத்தும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் எசெக்சில் உள்ள கென்னத் வீட்டிலிருந்து காவல்துறையினர் கருவிகளைக் கைப்பற்றி ஆடவரைக் கைது செய்ததாக அறியப்படுகிறது. இருப்பினும், மீண்டும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட பின்னரே கென்னத் புரிந்த குற்றங்களின் தீவிரத்தை அதிகாரிகள் உணர்ந்தனர்.

இந்நிலையில், புரிந்த குற்றங்களின் தீவிரம் கருதி மார்ச் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலை ஆகும்போது கென்னத்துக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்