வாஷிங்டன்: ஈரான், மெக்சிகோவுக்கான இஸ்ரேலியத் தூதரைக் கொல்ல முயன்றதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) குற்றஞ்சாட்டியுள்ளன.
தூதர் எய்னாட் கிரான்ஸ் நீகரைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தை மெக்சிகோ அதிகாரிகள் தலையிட்டுத் தடுத்ததாக இஸ்ரேல் கூறியது.
“இஸ்ரேலியத் தூதரை ஈரானின் உத்தரவுப்படி பயங்கரவாதக் கட்டமைப்பு ஒன்று தாக்க முயன்றதை முறியடித்த மெக்சிகோவின் பாதுகாப்பு, சட்ட அமலாக்கச் சேவைப் பிரிவுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
சதித்திட்டத்தைச் சென்ற ஆண்டின் (2024) பிற்பகுதியில் ஈரானின் புரட்சிப் பாதுகாவல் படை தொடங்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். பின்னர் அது இவ்வாண்டு முறியடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
வெனிசுவேலாவில் உள்ள ஈரானியத் தூதரகத்தைச் சேர்ந்தோர் சதித்திட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்நாட்டின் இடசாரி அதிபர் நிக்கலஸ் மடுரோ, டெஹ்ரானுக்கு நெருக்கமானவர்.
“சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இப்போது அதனால் அச்சுறுத்தல் இல்லை,” என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
“அரசதந்திரிகள், செய்தியாளர்கள், எதிர்ப்பாளர்களைக் குறிவைக்கும் ஈரானின் நீண்டகால வரலாற்றில் இது ஆக அண்மை முயற்சி. ஈரானியத் தரப்பு இருக்கும் எந்த நாடும் மிகவும் கவலைப்பட வேண்டிய அம்சம் இது,” என்றார் அவர்.
சதித்திட்டம் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்ற விவரத்தை அமெரிக்க அதிகாரி வெளியிடவில்லை. அதே நேரம் ஈரானும் மெக்சிகோவும் அதுகுறித்துக் கருத்து எதனையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஈரானிய மக்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

