தொடர்ந்து 11வது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவிப்பு

தொடர்ந்து 11வது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவிப்பு

1 mins read
2e550331-a2b6-470a-96c7-d5714cd6100f
ஹோர்முஸ் நீரிணையில் 30க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. - படம்: இபிஏ

வாஷிங்டன்: ஈரான் மீது தொடர்ந்து 11வது நாள் இரவுநேரத் தாக்குதலை நடத்தி முடித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்தத் தாக்குதல் ஏறத்தாழ 75 நிமிடங்கள் நீடித்ததாக அது கூறியது.

ஈரானின் ராணுவச் செயல்பாட்டு நிலையங்கள், கடல்துறை ஆற்றல் நிலையங்கள், விமானம் மற்றும் வானூர்தி நிறுத்துமிடங்கள் போன்றவற்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக சென்ட்காம் எனப்படும் அமெரிக்க ராணுவ மத்திய தளபத்தியம் குறிப்பிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களை அச்சுறுத்தும் ஈரானை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் 30க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறிய அந்த ராணுவ நிலையம், அத்தகைய தேவையற்ற தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி மாலுமிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தியதுடன் கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் குலைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஈரான் போர்தாக்குதல்அமெரிக்கா