தைவானிடம் $360 மில்லியன் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

தைவானிடம் $360 மில்லியன் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

1 mins read
63a44df2-a2e7-4047-8bbe-c4e57bc7e341
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சு. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: அமெரிக்க வெளியுறவு அமைச்சு, US$360 மில்லியனுக்கு ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் தைவானிடம் விற்க ஒப்புதல் அளித்துள்ளது.

“ஆயுதங்களை வாங்கும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வட்டாரத்தில் அரசியல் நிலைத்தன்மை, ராணுவச் சமநிலை, பொருளியல் முன்னேற்றம் ஆகியவற்றைக் கட்டிக்காக்கவும் இந்த விற்பனை உதவும்,” என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) கூறியது.

தைவானுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தைவானின் தற்காப்பு அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்