அமெரிக்கா, சீனா, தென்கிழக்கு ஆசிய தற்காப்பு அதிகாரிகள் சந்திப்பு

அமெரிக்கா, சீனா, தென்கிழக்கு ஆசிய தற்காப்பு அதிகாரிகள் சந்திப்பு

1 mins read
bbbf6c06-173d-490c-869f-6340c4d4921c
இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் 10வது தென்கிழக்காசிய நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர்களும் பேராளர்களும் கலந்துகொள்கின்றனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜகார்த்தா: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்கிழக்காசியா ஆகியவற்றைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்களும் அதிகாரிகளும் 10வது தென்கிழக்காசிய நாடுகள் தற்காப்பு அமைச்சர்கள் மாநாட்டிற்காக இந்தோனீசியாவில் கூடியுள்ளனர்.

அதில் இந்த வட்டாரத்திலும் இதற்கு வெளியிலும் நிலவும் புவி அரசியல் நெருக்கடிகள் பற்றி அவர்கள் கலந்துபேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் காஸாவில் பூசல்கள் மோசமடைவதால் அங்கு சண்டைநிறுத்தம் ஏற்படவேண்டும் என்று புதன்கிழமை கேட்டுக்கொண்டனர்.

“இந்த வட்டாரத்தில் உள்ள பல பாதுகாப்பு விவகாரங்களுக்கு, தீவிரமான, வெளிப்படையான அனைத்து நாடுகளையும் உள்ளடக்கும் உலக ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே தீர்வுகாணமுடியும் என்பது இந்தோனீசியாவின் கருத்து,” என்று இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோ தமது தொடக்க உரையில் கூறினார்.

திரு பிரபோவோ தமது உரையில் எந்தவொரு விவகாரத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும், இவ்வட்டாரத்தை நிலைகுலையச்செய்யும் விவகாரங்களாக தென்சீனக் கடல், கொரியத் தீபகற்பம், மியன்மார் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், ரஷ்யத் துணைத் தற்காப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்வோரில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்