சாக்லெட் ஆலையில் வெடிப்பு, இருவர் மரணம்

சாக்லெட் ஆலையில் வெடிப்பு, இருவர் மரணம்

1 mins read
ce05351e-8d79-4d15-84ab-d7084f978bae
படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவில் உள்ள சாக்லெட் ஆலை ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பில் குறைந்தது இருவர் மாண்டனர், ஒன்பது பேரைக் காணவில்லை.

இச்சம்பவம் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் ரெடிங் பகுதியில் நிகழ்ந்தது.

சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் வெடிப்பு நேர்ந்தது. அதில் ஆலையின் ஒரு கட்டடம் அழிந்துபோனது, மற்றொன்று சேதமடைந்தது.

அருகில் இருக்கும் சில வீடுகள் வெடிப்பால் அசைந்திருக்கின்றன.

வெடிப்புக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்