போட்டியில் வென்றால் அமெரிக்கக் குடியுரிமை

1 mins read
7153247f-ff0f-48d3-ab9f-c47851f48a6b
போட்டியாளர்களில் யார் அமெரிக்கா மீது அதிக பற்று கொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு குடியேறிகளுக்கான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அந்தப் போட்டி நிகழ்ச்சியில் வெல்லும் குடியேறிக்குப் பரிசாக அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது நிகழ்ச்சி நடத்துவது குறித்து அனுமதி கேட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் அனுமதி வழங்கினால்தான் இது நடக்கும் என்றும் அது கூறியது.

அனுமதி கிடைத்தாலும் போட்டியாளர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அதன் பிறகுதான் அவர்கள் போட்டியின் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படும்.

இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்துவது மகிழ்ச்சியான ஒன்று என்றும் இருப்பினும் அது சரியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க பொதுத்துறைப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த யோசனையைக் கனடிய அமெரிக்கரான ராப் வோர்சாஃப் தெரிவித்தார்.

போட்டியாளர்களில் யார் அமெரிக்கா மீது அதிக பற்று கொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும். நிகழ்ச்சி குறித்த 36 பக்க விவரத்தை ராப் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்