அமெரிக்கா: $1 டிரில்லியன் டாலர் தற்காப்புச் செலவினத்துக்கு ஒப்புதல்

2 mins read
dcb1d2a5-3da0-471e-9ddc-960baf9c035b
அமெரிக்க செனட் சபையின் இரு கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவுடன் 77க்கு 20 என்ற வாக்கு வித்தியாசத்தில் தேசிய தற்காப்பு உரிமையளித்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபை புதன்கிழமை (டிசம்பர் 17) $901 பில்லியன் டாலர் (S$1.1 டிரில்லியன்) தற்காப்புச் செலவின மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இரு கட்சிகளின் வலுவான ஆதரவுடன், 2026ஆம் நிதியாண்டிற்கான தேசிய தற்காப்பு உரிமையளித்தல் சட்ட மசோதா(National Defence Authorisation Act, NDAA)செனட் சபையில் இந்த மசோதா பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது.

அதனைச் சட்டமாக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இது, பிரதிநிதிகள் சபை, செனட் சபைகளில் 2025ஆம் ஆண்டில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளை இடையே ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாகும்.

இது சாதனையளவாக வருடாந்தர ராணுவச் செலவினத்தை $901 பில்லியன் டாலராக அங்கீகரித்திருப்பதுடன், படையினருக்கு 4 விழுக்காடு ஊதிய உயர்வு, ராணுவத் தளவாடங்கள் வாங்குதல், சீனா, ரஷ்யா உடனான போட்டித்தன்மையை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உக்ரேனுக்குக் கைகொடுக்கவும் ஐரோப்பாவின் தற்காப்பை வலுப்படுத்தவும் வாஷிங்டன் பெருமளவு ஆதரவு வழங்கவிருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் உக்ரேனுக்கு மொத்தம் $800 மில்லியன் டாலர் (S$1 பில்லியன்) வழங்கப்படும். உக்ரேன் அமெரிக்க நிறுவனங்களிடம் ஆயுதம் வாங்க இத்தொகை உதவும்.

பால்டிக் பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் லாட்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளின் தற்காப்புக்காக $175 மில்லியன் டாலர் (S$226 மில்லியன்) அளிக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 76,000க்கும் கீழே குறைப்பதற்கான தற்காப்புத் துறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இதற்கிடையே, தைவானுக்கு $11.1 பில்லியன் டாலர் (S$14.3) ஆயுத விற்பனைக்கும் அமெரிக்கா இணங்கியுள்ளது.

இது சீனாவிலிருந்து அதிகரித்து வரும் ராணுவ அழுத்தத்தை எதிர்கொள்ளும் தைவானுக்கான ஆக அதிகளவிலான ஆயுத விற்பனையளவாகும்.

முன்மொழியப்பட்ட ஆயுத விற்பனை எட்டுப் பொருள்களை உள்ளடக்கியது என்று தைவானின் தற்காப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“தைவான் போதுமான தற்காப்புத் திறன்களைப் பேணுவதிலும் வலுவான தற்காப்புச் சக்தியை விரைந்து உருவாக்குவதிலும் அமெரிக்கா தொடர்ந்து உதவுகிறது. இது வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கான அடித்தளமாகவும் அமைகிறது,” என்று அது குறிப்பிட்டது.

ஆயுத விற்பனைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அமெரிக்கக் கட்சிகளிடம் தைவான் பரவலான ஆதரவைப் பெற்றிருந்தாலும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆயுத விற்பனையைத் தடுக்க அல்லது மாற்ற வாய்ப்பு உள்ளது.

ஆயுத ஒப்பந்தம் குறித்த மற்றொரு தனி அறிக்கையில், ஆயுத விற்பனை அமெரிக்க தேசிய, பொருளியல், பாதுகாப்பு நலன்களுடன் உடன்பட்டது என்று கூறியது. தைவான் அதன் ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவதற்கும் நம்பகமான தற்காப்புத் திறனைப் பராமரிப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளை ஆதரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்