டிரம்ப்பின் வெனிசுவேலா எண்ணெய் ஒப்பந்தத்தைத் தற்காக்கிறது அமெரிக்கா

டிரம்ப்பின் வெனிசுவேலா எண்ணெய் ஒப்பந்தத்தைத் தற்காக்கிறது அமெரிக்கா

1 mins read
562a9d12-760b-4cba-80df-cc601521899d
வெனிசுவேலாவுடன் செய்துகொண்ட எண்ணெய் ஒப்பந்தம் அமெரிக்கர்களுக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.  - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: வெனிசுவேலாவுடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செய்துகொண்ட எண்ணெய் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிகாரிகள் தற்காத்துப் பேசியிருக்கின்றனர். அந்த ஒப்பந்தம் அமெரிக்கர்களுக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் என்று அவர்கள் கூறினர்.

இந்த பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்கு, வெனிசுவேலாவின் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) ஒப்புதல் அளித்தது. அதன்படி, வெனிசுலாவின் எண்ணெய் இருப்பில் ஐந்தில் ஒரு பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

எனினும், ஜனவரி மாதம் வெனிசுலா அதிபர் நிக்கலஸ் மடுரோவை ஆட்சியிலிருந்து அகற்றிய பிறகு, கரகாஸில் உள்ள அரசாங்கத்தின் மீது வாஷிங்டன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்துப் பல முக்கியக் கேள்விகள் எழுந்துள்ளன.

ஈரான் போர் காரணமாக விண்ணை முட்டும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த டிரம்ப் முயன்று வருகிறார். இத்தகைய சூழலில், வெனிசுவேலா ஒப்பந்தம் அதற்கு உதவும் என்ற நம்பிக்கையில் அவர் வெள்ளை மாளிகையில் எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைச் சந்தித்தார்.

“நாம் அமெரிக்க எரிசக்தி ஆதிக்கத்தை உலக அளவில் நிலைநிறுத்தி வருகிறோம்!,” என்று இந்தச் சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப், ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

எண்ணெய் நிறுவனமான செவ்ரோன், வெனிசுவேலாவில் அதன் செயல்பாடுகளைப் பெருமளவில் விரிவாக்கம் செய்வது குறித்த அறிவிப்பைப் புதன்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காவெனிசுவேலாஎண்ணெய்விலை