சாலையில் பணமழை; $266,000 வெள்ளியைக் கொட்டிய நபர்

சாலையில் பணமழை; $266,000 வெள்ளியைக் கொட்டிய நபர்

1 mins read
a6fd59bb-76bc-4e3b-982d-78d6aeefc183
படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவின் விரைவுச் சாலை ஒன்றில் ஏறக்குறைய 266,000 வெள்ளியை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆடவர் ஒருவர்.

மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோகத்தில் பணத்தை சாலையில் வீசியதாக அவர் கூறினார்.

சம்பவம் ஆரெகன் மாநிலத்தில் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 11) மாலை நடந்தது.

மிகவும் பரபரப்பாக உள்ள யூஜின் விரைவுச் சாலையில் 100 டாலர் அமெரிக்க நோட்டுகளை வீசினார் 38 வயது கோலின் டேவிஸ் மெக்கார்த்தி.

மெக்கார்த்தியின் செயலால் அவரின் குடும்பத்தார் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். ஆடவரின் இச்செயலால் தங்களிடம் எந்த பணமும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

சாலையில் ஆடவர் பணத்தை வீசியதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணத்தை எடுக்க பலர் தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மெக்கார்த்தியைத் தடுத்தி நிறுத்தினர்.

ஆடவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.

பணத்தை எடுத்தவர்கள் அதை கொண்டு வந்து தருமாறு மெக்கார்த்தியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்