வாஷிங்டன்: அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முதல் தவணையின்போது கல்வித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கக் கல்வித் துறை சனிக்கிழமை (ஜனவரி 31) கே-12 பள்ளிகள், கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பாலியல் முறைகேடு வழக்குகளில் பள்ளிகளின் பொறுப்பைக் குறைப்பது, பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களுக்கு அதிக உரிமைகளை வழங்குவது அதில் அடங்கும்.
அரசாங்க நிதியுதவியைப் பெறும் கல்வித் திட்டங்களில் பாலியல் பாகுபாட்டைத் தடுக்கும் 1972 சட்டத்தின் (Title IX ) திருத்தப்பட்ட விளக்கத்தை துறை அமல்படுத்தும் என எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அந்தக் கடிதம் அறிவுறுத்தியது.
பைடன் நிர்வாகத்தின்போது அறிவிக்கப்பட்ட அந்த மாற்றம், பாலியல் சார்பு, பாலின அடையாளத்தின் அடிப்படையில் துன்புறுத்தல் அல்லது நிராகரிப்பை பாகுபாடாகக் கொள்ளும் வகையில் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல், பள்ளி வளாகத்தில் பாலியல் வன்முறை, துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் புதிய தரங்களை மீண்டும் பின்பற்றுமாறு கல்வியாளர்களுக்கு அறிவுறுத்தியது.
2018ல் உருவாக்கப்பட்ட பழைய விதிகளில், பாலியல் முறைகேட்டுச் சம்பவங்களில் பள்ளிகளின் பொறுப்பை நிர்ணயிக்கும் தரநிலை தளர்த்தப்பட்டது. இது விசாரணைகளில் வெவ்வேறு சாட்சிகளின் தரநிலைகள், முறையீட்டு செயல்முறைகளைப் பின்பற்ற பள்ளிகளுக்கு இடமளித்தது.
பாலியல் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் மாணவர்கள் மீது ஒருவர் குறுக்கு விசாரணை செய்ய, வழக்கறிஞர் உட்பட, நேரடி விசாரணைகளை பள்ளிகள் நடத்த வேண்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
கெண்டக்கி கூட்டாட்சி நீதிபதி ஒருவர் முன்னைய ஆட்சியின் திருத்தங்கள் நடைமுறைக்கு வராமல் தடுத்ததை அடுத்து, மாற்றம் உடனடியாக நடப்புக்கு வரலாம் என்று கடிதம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மாற்றுப் பாலின மாணவர்களுக்குக் கூடுதலான பாதுகாப்பை அடிப்படையாகக்கொண்ட அந்தச் சட்டத் திருத்தம், அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிபதி குறிப்பிட்டதால் அப்போது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை.
மாணவர்கள் உரிமைக் குழுக்கள் புதிய மாற்றத்தை வரவேற்றுள்ளன.

