கனடா வான்வெளியில் பறந்த மர்மப் பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த போர்விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அண்மையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது இது இரண்டாவது முறை. கடந்த வாரம் சீனாவின் உளவுப் பலூன் ஒன்று அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சம்பவத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்தார். வீழத்தப்பட்ட பொருளின் பாகங்கள் பகுப்பாய்வு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். அந்த பொருள் எங்கிருந்து வந்தது, எந்த நோக்கத்துடன் அது கனடாவிற்கு அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை கண்டறிய அது உதவும்.
பொருள் உருளையாக இருந்ததைத் தவிர மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

