அமெரிக்காவில் ஈமச்சடங்குகளை செய்யும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் 30க்கும் மேற்பட்ட அழுகிய நிலையில் உள்ள பிணங்களை தம்முடன் வைத்துக்கொண்டுள்ளார்.
அவர் 40-க்கும் மேற்பட்ட பிணங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டார்.
ரேண்டி லாணக்ஃபோர்ட் என்னும் அந்த ஆடவர் இந்தியானா பகுதியில் ஈமச்சடங்குகளுக்காக தம்மிடம் கொடுக்கப்படும் பிணங்களுக்கு ஈம சேவைகள் செய்யாமல் அவற்றை சொந்தமாக்கி கொண்டார்.
ரேண்டிக்கு 12 மாதச்சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன் பாதிக்கப்பட்ட 53 குடும்பத்தினருக்கு அவர் 62,000 வெள்ளி கொடுக்கவும் உத்தரவிடப்படலாம்.
கடந்த ஜூலை மாதம் ஆடவரின் அலுவலகத்தில் இருந்து மோசமான வாடை வந்தது. அதன் பின்னர் அந்த இடத்தை சோதனையிட்ட அதிகாரிகள் அழுகிய நிலையில் பல மாதங்களாக இருந்த பிணங்களைக் கண்டனர்.
அதன் பின்னர் ரேண்டி மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றத்தை நிரூபித்தனர்.
ஆடவருக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.