எரிசக்தி விநியோகத்திற்கு உதவ கப்பல் போக்குவரத்துக்கான விதிவிலக்கை அமெரிக்கா நீட்டித்துள்ளது

எரிசக்தி விநியோகத்திற்கு உதவ கப்பல் போக்குவரத்துக்கான விதிவிலக்கை அமெரிக்கா நீட்டித்துள்ளது

1 mins read
9995697b-cce6-4a53-9c1c-cce20b6835cc
வெளிநாட்டுக் கொடியுடன் கூடிய கப்பல்கள் அமெரிக்கத் துறைமுகங்களுக்கு இடையே தற்காலிகமாகச் சரக்குகளைக் கொண்டு செல்ல அனுமதிக்கும் தற்போதுள்ள விதிவிலக்கு, மே 17ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது. இந்த அண்மைய நடவடிக்கையின் மூலம் இதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஈரான் மீதான போரினால் விநியோகத் தடங்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா முழுவதும் எண்ணெய் மற்றும் உரங்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, கப்பல் போக்குவரத்துக்கான விதிவிலக்குக்கு 90 நாள் நீட்டிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வழங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கொடியுடன் கூடிய கப்பல்கள் அமெரிக்கத் துறைமுகங்களுக்கு இடையே தற்காலிகமாகச் சரக்குகளைக் கொண்டு செல்ல அனுமதிக்கும் தற்போதுள்ள விதிவிலக்கு, மே 17ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது. இந்த அண்மைய நடவடிக்கையின் மூலம் இதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

“ஆரம்பத்தில் இந்த விதிவிலக்கு வழங்கப்பட்டதிலிருந்து சேகரிக்கப்பட்ட புதிய தரவுகள், அமெரிக்கத் துறைமுகங்களுக்கு அதிகமான பொருள்கள் கணிசமான அளவில் விரைவாகச் சென்றடைய முடிந்தது என்பதைக் காட்டுகின்றன,” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் தெரிவித்தார்.

“இந்த நீட்டிப்பானது, முக்கிய எரிசக்திப் பொருள்கள், தொழில்துறை மூலப்பொருள்கள் மற்றும் விவசாய அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தடையின்றித் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய உதவும்,” என்று அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கான 90 நாள் நீட்டிப்பை அதிபர் டிரம்ப் வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்