பாகிஸ்தானில் அமெரிக்கா,ஈரான் பேச்சுவார்த்தை

பாகிஸ்தானில் அமெரிக்கா,ஈரான் பேச்சுவார்த்தை

1 mins read
அமெரிக்காவின் நட்பு நாடாக பாகிஸ்தான் மாறிவருகிறது
e9e1fec5-a08d-455b-93ac-a09d9bb7901b
பாகிஸ்தான் பிரதமர் செபா‌ஷ் ‌‌ஷெரீப் மற்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை இஸ்லாமாபாத் ஏற்று நடத்தவுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் செபா‌ஷ் ‌‌ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) நடக்கும் என்றும் அதில் அமெரிக்கா மற்றும் ஈரானின் அரசதந்திர அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தகவலைத் திரு ஷெரீப் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 8) பதிவிட்டார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இரண்டு வாரம் சண்டை ஏதும் நடக்காது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது திரு ‌‌ஷெரீப்பின் தகவல் வெளியாகியுள்ளது.

“இருதரப்பும் ஆக்ககரமாகச் செயல்பட்டு தங்களுக்கிடையே உள்ள பூசலை சரிசெய்து கொள்வார்கள்,” என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அண்மை மாதங்களாகப் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

ஈரான் போரை பாகிஸ்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தற்போது அமெரிக்காவின் நட்பு நாடாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் போலவே எகிப்து, துருக்கியும் அமைதி பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தன. சீனாவும் ஈரானை அமைதியைத் தேர்ந்தெடுக்க ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்