கர்ப்பிணிகளுக்கு அமெரிக்க விசா வழங்க கட்டுப்பாடு

கர்ப்பிணிகளுக்கு அமெரிக்க விசா வழங்க கட்டுப்பாடு

1 mins read
4c3ed0a3-1b89-48fd-acdf-396ee07b5f5b
வாஷிங்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு வெளியே பறக்கும் அமெரிக்க கொடி. படம்: புளூம்பெர்க் -

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைகளைக் கையாண்டு வருகிறது.

அதன் ஓர் அங்கமாக, கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அது தொடர்பான அறிவிப்பை அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் (ஜனவரி 23) வெளியிட்டார்.

கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்குச் சென்று குழந்தை பெற்றால், அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை எளிதில் கிடைக்கும் நடைமுறை உள்ளது.

இதனால் ர‌ஷியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக வேண்டுமென்றே அமெரிக்காவுக்கு பயணம் செய்து குழந்தை பெற்று கொள்வதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில், கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்த நடைமுறை நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளது.

அதன்படி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம், கர்ப்பிணியா என்றும், கருவுறும் திட்டம் இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.

#தமிழ்முரசு #அமெரிக்கா #மகப்பேறுசுற்றுலா #விசா

குறிப்புச் சொற்கள்