ஜப்பானின் நோட்டோ பகுதியில் அமெரிக்க ராணுவம் பணியில் அமர்த்தப்பட இருக்கிறது: தகவல்கள்

ஜப்பானின் நோட்டோ பகுதியில் அமெரிக்க ராணுவம் பணியில் அமர்த்தப்பட இருக்கிறது: தகவல்கள்

1 mins read
0eabccc6-0a9b-4eee-9faa-717361999d48
ஜனவரி முதல் தேதி நேர்ந்த நிலநடுக்கத்தில் 220க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோட்டோ தீபகற்பப் பகுதியில் பணியில் அமர்த்தப்படவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனவரி முதல் தேதி நேர்ந்த நிலநடுக்கத்தில் 220க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன; சாலைகளும் மற்ற உள்ளமைப்புகளும் சேதமுற்றன.

அந்தப் பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. கடுங்குளிருக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு உயிர் பிழைத்தவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் மீட்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்.

அண்மை நாள்களில் அந்தப் பகுதியில் கடும் பனிமூட்டமும் ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானை உலுக்கியிருக்கும் ஆக மோசமான நிலநடுக்கம் அது.

2016ஆம் ஆண்டில் ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான குமாமோட்டோவைத் தாக்கிய நிலடுக்கங்களில் 276 பேர் மாண்டனர்.

இரண்டாம் உலகப் போரிலிருந்து அமெரிக்கப் படைகள் ஜப்பானில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்