வாஷிங்டன் - அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு வளாகத்துக்குள் வரும் செய்தியாளர்கள் அதிகாரபூர்வ மெய்க்காவலர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உடனடியாக நடப்புக்கு வரும் அந்தக் கட்டுப்பாடு அர்லிங்டன், வர்ஜினியா ஆகியவற்றில் உள்ள தற்காப்புத் துறை தலைமையகங்களுக்குள் அனுமதி பெற்ற செய்தியாளர்கள் வருவதைத் தடை செய்கிறது. அதிகாரபூர்வ அனுமதியும் மெய்க்காவலர்களையும் உடைய செய்தியாளர்கள் மட்டும் உள்ளே செல்ல முடியும்.
“வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதில் தற்காப்பு அமைச்சு உறுதியாக இருந்தாலும் ரகசிய புலனாய்வுத் தகவல்களைப் பாதுகாப்பதும் அமைச்சின் கடமை.
“அத்தகைய தகவல்கள் கசிவது பல அமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கலாம்,” என்று திரு ஹெக்ஸெத் குறிப்பிட்டார்.
புதிய கட்டுபாடு செய்தி ஊடகங்களின் சுதந்திரத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல் என்று தற்காப்பு அமைச்சு செய்தியாளர் சங்கம் குறிப்பிட்டது.
“செயல்பாட்டுப் பாதுகாப்பு குறித்த கவலைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்காப்பு அமைச்சின் செய்தியாளர் சங்கம் பல ஆண்டுகளாகப் பல தகவல்களைப் பெற்றது,” என்று சங்கம் குறிப்பிட்டது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததிலிருந்து தற்காப்பு அமைச்சு மூன்று அதிகாரிகளைப் பாதித்த தகவல் கசிவை விசாரிக்கத் தொடங்கியது.
பல ஆண்டுகால ஊடக நிறுவனங்களுக்கான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சிஎன்என், என்பிசி நியூஸ் ஆகியவை தற்காப்பு அமைச்சு அலுவலகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
மாறாக, புதிய சுழற்சி முறையில் டிரம்ப் நிர்வாகத்துக்கு ஆதரவாக உள்ள நியூயார்க் போஸ்ட், பிரெய்ட்பார்ட், டெய்லி காலர், ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் அமைச்சின் அலுவலகங்களில் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
செய்தியாளர் சங்கத்தில் உள்ள இதர உறுப்பு செய்தி நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதிசெய்ய அந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது என்று டிரம்ப் நிர்வாகம் சொன்னது.