தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செய்தி வரும் முன்னே, குழந்தைப் பிறப்பு வரும் பின்னே

1 mins read
07e9bad1-188c-401a-a856-af4817a913c5
சிபிஎஸ்6 செய்தித் தளத்தில் மே 21ஆம் தேதி ‘பேபி வாட்ச்’ என்ற தலைப்பு வேடிக்கையாக விட்டு விட்டு வந்தது. படத்தில் ஒலிவியா வலப்பக்கமாக அமர்ந்துள்ளார். - படம்: யூடியூப்

இம்மாதம் 21ஆம் தேதி செய்தி வாசிக்கச் சென்ற திருவாட்டி ஒலிவியா ஜெக்கித் என்பவருக்குச் செய்தித் தலைப்புகளைப் பற்றிய கவலை மட்டும் இருக்கவில்லை.

அமெரிக்காவின் சிபிஎஸ்6 தொலைக்காட்சி நிறுவன செய்தித் தொகுப்பாளராக அன்றைய தினம் செய்தி வாசிக்கத்தான் சென்றார் திருவாட்டி ஒலிவியா. ஆனால், நேரலையாகச் செய்தி தொகுத்தளிக்க நில நிமிடங்களே இருந்த நிலையில், அவர் மகப்பேற்று வலிக்கு ஆளானார்.

செய்தித் தொகுப்புக்குச் சற்று முன்னர், கழிவறையில் அவரது பனிக்குடம் உடைய, அதைப் பொருட்படுத்தாது அவர் செய்தியைத் தொகுத்தளிக்கத் தயாரானார்.

அவரது நிலைமையை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் சக தொகுப்பாளரான ஜூலியா டன் விளக்கினார்.

“இந்தக் காலை வேளையில் உங்கள் அனைவருக்கும் சுடச்சுட ஒரு செய்தி சொல்ல இருக்கிறேன்,” என்று ஆரம்பித்தார் திருவாட்டி டன்.

பின்னர், “ஒலிவியாவின் பனிக்குடம் உடைந்துவிட்டது. ஆகையால், அவர் மகப்பேறு தொடர்பான சிரமத்துடன் செய்தியைத் தொகுத்துத் தருகிறார்,” என்று கூறினார்

ஒலிவியாவுக்கு விட்டு விட்டு மகப்பேற்று வலி எடுத்தபோதும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவரான அவர், தமது மூன்று மணிநேர செய்தித் தொகுப்பு நிகழ்ச்சியை எப்பொழுதும் போலவே, சிரித்துப் பேசியபடியே முடித்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்