ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் அமெரிக்கத் துறைமுகங்கள் முடக்கம்

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் அமெரிக்கத் துறைமுகங்கள் முடக்கம்

1 mins read
4d598008-45fb-4c4a-9911-8461a2766a42
நியூயார்க், நியூஜெர்சி துறைமுக ஆணையத்தில் கப்பல் கொள்கலன்களை நகர்த்தும் ஊழியர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: பல்லாயிரக்கணக்கான துறைமுக ஊழியர்கள் அமெரிக்காவின் பெரும்பகுதி துறைமுகங்களில் காலவரையறையின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அதிபர் தேர்தலையும் பரபரப்பான விடுமுறைக் காலத்தையும் முன்னிட்டு, வணிக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அனைத்துலக ‘லாங்ஷோர்மென்’ சங்க உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) கிழக்கு, மெக்சிகோ வளைகுடா கடற்கரைகளில் உள்ள 14 பெரிய துறைமுகங்களில் வெளிநடப்பு செய்தனர். இதனால், மெய்ன் முதல் டெக்சஸ் வரை கொள்கலன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் துறைமுகங்கள் இதுபோன்ற அளவு முடங்கியிருப்பது இதுவே முதன்முறை.

கூடுதல் பேச்சுவார்த்தைக்காக வேலை நிறுத்தத்தை 80 நாள்களுக்கு நிறுத்திவைக்கும் அதிகாரம் அதிபர் ஜோ பைடனுக்கு உண்டு. ஆனால், அவர் செயல்படத் திட்டமிடவில்லை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

தொழிலாளர் சங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இருதரப்புக்கும் இடையேயான தற்போதைய ஒப்பந்தம் திங்கட்கிழமையுடன் காலாவதியானது.

குறிப்புச் சொற்கள்