2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்

1 mins read
a7b7d17a-c2b1-410c-a8da-1f1a36c6a27f
படம்: EPA-EFE -

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) அறிவித்துள்ளார்.

துணை அதிபராக கமலா ஹாரிஸ் போட்டியிடப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக உள்ள 80 வயது பைடனுக்கு அந்நாட்டு மக்கள் மீண்டும் ஆதரவு தருவார்களா என்பது இப்போது பெரும் கேள்வியாக உள்ளது.

இரண்டாம் தவனை முடியும் போது பைடனுக்கு 86 வயதாகும்.

ஒரு காணொளி வாயிலாக தமது அறிவிப்பை வெளியிட்ட திரு பைடன், அமெரிக்காவின் ஜனநாயகத்தைக் காப்பதே தமது கடமை என்று குறிப்பிட்டார்.

அதிபர் பைடனுக்கு எதிராக முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அமெரிக்க தேர்தல் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் அமெரிக்க மக்களிடையே அதிபர் பைடனின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டது. அதில் திரு பைடனுக்கு 39 விழுக்காடு ஆதரவு மட்டுமே கிடைத்திருந்தது.

குறிப்புச் சொற்கள்