தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க தேர்தல்: பிரசாரச் செலவு $15.9 பில்லியன்

1 mins read
13035125-2c48-4e0c-90c5-954342ab6349
2016ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது இரண்டு மடங்குக்கு மேல் பிரசாரத்துக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

வாஷிங்டன்: 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக பிரசாரத்துக்கு 15.9 பில்லியன் யுஎஸ் டாலர் (S$20.9 பில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆக செலவுமிக்க தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டில் செலவழிக்கப்பட்ட 15.1 பில்லியன் யுஎஸ் டாலரைவிட தற்போது கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் 6.5 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் தற்போது இரண்டு மடங்குக்கு மேலாகும்.

கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அதிக நிதியை தேர்தல் பிரசாரத்துக்குத் திரட்டியிருக்கிறார்.

அவரது பிரசாரக் குழுவினர் நேரடியாக ஒரு பில்லியன் டாலரை தேர்தல் பிரசாரத்திற்காக திரட்டியிருக்கின்றனர். இதில் 40 விழுக்காடு சிறிய நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அரசியல் ஆதரவு குழுக்களிடமிருந்து கூடுதலாக 586 மில்லியன் டாலர் திரட்டப்பட்டுள்ளது.

டோனல்ட் டிரம்ப் பிரசாரத்திற்கு 382 மில்லியன் டாலர் நேரடியாகத் திரட்டப்பட்டது. இதில் 28 விழுக்காடு நிதியை சிறிய நன்கொடையாளர்கள் வழங்கியுள்ளனர். அதே சமயத்தில் அங்கீகரிக்கப்பட்ட குழுக்கள் 694 மில்லியன் டாலர் பங்களித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்