ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம்; பின்வாங்கும் அமெரிக்கா

1 mins read
8162fcd7-7cbc-43e3-8515-3d571cbc36bc
ஆக்கஸ் ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 307.5 பில்லியன் வெள்ளியாகும். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தங்களுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பலைச் செய்துகொடுக்குமாறு ஒப்பந்தம் செய்தன.

இந்நிலையில், தற்போது அதிபராக உள்ள டோனல்ட் டிரம்ப் இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் அமெரிக்காவை முன்னிலைப் படுத்தி இருக்க வேண்டும். அதனால் இதை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை எதிர்த்துப் போராடப் பலவிதத் தொழில்நுட்ப வசதிகளுடன் தனக்கு முதல் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல் வேண்டும் என்று ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையை ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தற்காத்துப் பேசியுள்ளன.

பொதுவாகப் புதிய நிர்வாகம் ஆட்சிக்கு வரும்போது முக்கிய ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வது வழக்கமானது தான் என்று அந்நாடுகள் கூறுகின்றன.

ஆக்கஸ் ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 307.5 பில்லியன் வெள்ளியாகும்.

குறிப்புச் சொற்கள்