தைவானுக்கு $429 மில்லியன் ராணுவ பாகங்களை விற்கும் அமெரிக்கா

1 mins read
8ddcf817-fde4-42fc-a172-70f02dcc6728
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையின்கீழ் தைவானுக்கு முதல்முறையாக ராணுவப் பாகங்கள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: தைவானுக்குப் போர் விமானங்களின் பாகங்கள், பழுதுபார்ப்பு பாகங்கள் உள்ளிட்ட ராணுவப் பொருள்களை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

அந்த ராணுவப் பாகங்களின் மதிப்பு 429 மில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையின் கீழ் தைவானுக்கு முதல்முறையாக ராணுவப் பாகங்கள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

“தைவான் அதன் தற்காப்பை வலுப்படுத்துகிறது. இதனால் தற்போதும் எதிர்காலத்திலும் வரும் சவால்களை எதிர்கொள்ள அது தயாராக இருக்கும். எஃப்-16, சி-130 மற்றும் சில போர் விமானங்கள் தைவானுக்கு உதவியாக இருக்கும்,” என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகாரபூர்வ அரசதந்திர உறவு உள்ளது. ஆனால், தைவானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இதுபோன்ற அரசதந்திர உறவு இல்லை. இருப்பினும் அமெரிக்கா, தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்குவதில் முன்னணி நாடாக உள்ளது.

“ராணுவப் பொருள்களின் விற்பனை ஒரு மாதத்திற்குள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்று தைவானிய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்