அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் தமது கைப்பேசியை வாங்கிய ஆசிரியர் மீது மிளகுக் கரைசலைக் கொண்டு தாக்கியுள்ளார்.
அந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் கடந்த வாரம் நாஷ்வில்லியில் உள்ள அன்டியோக் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
காணொளியில் கைப்பேசியை மாணவியிடம் இருந்து ஆசிரியர் வாங்கிக்கொண்டு அறைக்கு வெளியே செல்வதும், கைப்பேசியை திருப்பிதர மாணவி ஆசிரியரைக் கேட்பதும், அதன் பின்னர் மாணவி ஆசிரியர் மீது மிளகுக் கரைசலைக் கொண்டு தாக்குவதும் பதிவாகியிருந்தது.
மாணவி பாடம் நடக்கும் போது கைப்பேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மாணவி ஆசிரியரைத் தாக்கியது தவறு, அவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பயனீட்டாளர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தப் பள்ளியில் இதற்கு முன்னர் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக மற்றொருவர் கருத்து பதிவிட்டார். தவறு செய்யும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.