சிரியாவில் தாக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள்

சிரியாவில் தாக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள்

1 mins read
9b06d45e-4007-4218-98ba-636155703336
ஆளில்லா வானூர்தி பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. - படம்: இணையம்

வாஷிங்டன்: சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர்.

ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியிடப்பட்டது.

கடந்த சில நாள்களில் மத்தியக் கிழக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இதுவே இரண்டாவது முறை.

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் அதன் ஆதரவுடன் செயல்படும் அமைப்புகளும் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மத்தியக் கிழக்கில் பதற்றநிலை நிலவுகிறது.

இத்தாக்குதல்களை எதிர்கொள்ள இஸ்‌ரேலியப் படைகளும் அமெரிக்கப் படைகளும் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்