ஈரானுடன் ‘பொருளியல் போர்’; துணை நிற்குமாறு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானுடன் ‘பொருளியல் போர்’; துணை நிற்குமாறு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 mins read
d940a9f1-5c75-40de-bb0e-7f78706755b2
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டாட் பெசன்ட். - படம்: இபிஏ
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: ஈரானைப் பொருளியல்ரீதியாக மேலும் தனிப்படுப்படுத்தி அந்நாட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் தங்கள் பக்கம் நிற்குமாறு அமெரிக்கா, அதன் பங்காளி நாடுகளுக்கும் சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.

டெஹ்ரானுக்கு ராணுவரீதியாக நெருக்குதல் அளிப்பதற்குப் பதிலாக பொருளியல்ரீதியாக நடவடிக்கை எடுக்க திரு டிரம்ப் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அவரின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை திரு பெசன்ட்டின் எச்சரிக்கை வெளிக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காஈரான் போர்டோனல்ட் டிரம்ப்